நெருக்கடியான வாடகை கட்டடத்தில் இயங்கும் சார் – பதிவாளர் அலுவலகம்

குரோம்பேட்டை:குரோம்பேட்டை சார்-பதிவாளர் அலுவலகம் பல ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இங்கு, தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் அமர போதிய இடவசதி இல்லை.

ஆவணங்கள் வைப்பதற்கும், அதிகாரிகளுக்கும் போதிய அறைகள் இல்லை. அதிகாரிகளுக்கு மட்டும் கழிப்பறை வசதி உள்ளது. மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை.

ஏற்கனவே நெரிசல் கொண்ட இச்சாலையில், பத்திரப் பதிவுக்கு வருவோரின் வாகனங்கள்நிறுத்தப் படுவதால், இன்னும் நெரிசல் அதிகரிக்கிறது.

பல ஆண்டுகளாக, நெருக்கடியான இடத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கும் இவ்வலுவலகத்திற்கு, இடம் ஒதுக்கி சொந்த கட்டடம் கட்ட வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்துகின்றனர்.

பல்லாவரம் தி.மு.க., – எம்.எல்.ஏ., கருணாநிதி, இது தொடர்பாக சட்டசபையிலும் பேசினார்.

இதையடுத்து, பல பகுதிகளில் இடம் தேடி, பல்லாவரம் தாசில்தார் அலுவலகம் அருகே, அலுவலகம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதனால், பத்திரப்பதிவு துறை நிதி ஒதுக்கி, கால தாமதமின்றி கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *