கோவூர் – பரணிபுத்துார் இடையே அணுகு சாலை சீரமைக்கப்படுமா?
குன்றத்துார்,:தாம்பரம்- – மதுரவாயல் பைபாஸ் சாலையின் அணுகு சாலை, கோவூர் – பரணிபுத்துார் பகுதியில் உள்ளது.
இந்த சாலையானது, போரூர் – குன்றத்துார் நெடுஞ்சாலையையும், முகலிவாக்கம் – மாங்காடு சாலையையும், பரணிபுத்துார் – அய்யப்பன்தாங்கல் சாலையையும் இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் இந்த வழியை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த சாலையில், 200 மீட்டர் துாரம் சீரமைக்கப்படாமல், குண்டும் குழியுமாக, போக்குவரத்திற்கே லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இதனால், மழைக்காலத்தில் சேறும் சகதியுமாகவும், வெயில் காலத்தில் புழுதி பறப்பதாகவும் உள்ளது. அதனால், அப்பகுதிவாசிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
மேலும், குண்டும், குழியுமான சாலையால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.