சிலருக்கு மட்டுமின்றி அனைவருக்கும் சிறந்த கல்வி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விருப்பம்

சென்னை:“அனைவருக்கும் அடிப்படை கல்வி அவசியமானது. சிலருக்கு மட்டும் சிறந்த கல்வி என்றில்லாமல், அனைவருக்கும் சிறந்த கல்வி கிடைக்க வேண்டும்,” என, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் தெரிவித்தார்.

ராஜஸ்தானி அசோசியேஷன் சார்பில், ‘ராஜஸ்தானி தமிழ் சேவா விருதுகள் – 2025’ வழங்கும் நிகழ்ச்சி, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லுாரியில் நேற்று நடந்தது.

சேவை மற்றும் அரசு பணி பிரிவில், முன்னாள் தலைமை செயலர் இறையன்பு; கல்வித்துறை சேவை பிரிவில், கேம்பிரிட்ஜ் பள்ளி நிறுவனர் சனத்குமார்; 35 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்த்த இந்தியாவின் மர மனிதர் யோகநாதன்.

சமூக நலத்துறை பிரிவில், சுவாமி விவேகானந்தா கிராமப்புற வளர்ச்சி சங்கத் தலைவர் கிருஷ்ணன் ஆகியோருக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம், சேவா விருது மற்றும் 2 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

அப்போது, அவர் பேசியதாவது:

குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அவர்களை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

ஏனெனில், கல்வியின் வாயிலாக, எதிர்கால சந்ததியினர் சுறுசுறுப்பான குடிமக்களாகவும், நேர்மறையான மாற்றத்தின் கருவிகளாகவும் மாற, அதிகாரம் அளிக்க முடியும்.

அனைவருக்கும் அடிப்படை கல்வி அவசியமானது. சிலருக்கு மட்டும் சிறந்த கல்வி என்றில்லாமல், அனைவருக்கும் சிறந்த கல்வி கிடைக்க வேண்டும். ராஜஸ்தான் சமூகத்தினர் பல கடினமாக சூழ்நிலைகளை கடந்து முன்னேற்றம் அடைந்துள்ளனர். இந்த நல்ல முயற்சி மேலும் தொடர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

‘தமிழகத்தில் ராஜஸ்தானியர்கள்: 100 வருட பாரம்பரியம்’ என்ற நுாலை ஆடிட்டர் குருமூர்த்தி வெளியிட்டு பேசுகையில், “ராஜஸ்தான் சமூகத்தினர், சமுதாயத்திற்கு அளித்து வரும் பங்கு அளப்பரியது.

”உண்மையான உயர்வு என்பது பிறருக்கு சேவை செய்வதும், நேர்மறையான தாக்கத்தை உருவாக்குவதும் தான். அவர்களின் சாதனைகளை கொண்டாடுவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்,” என்றார்.

நிகழ்ச்சியில், ராஜஸ்தானி சங்கத்தின் தலைவர் பிரவீன்குமார் டாடியா, பொதுச்செயலர் ஹேமந்த் துகர், பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம், தமிழ் சேவா விருது பிரிவு தலைவர் நரேந்திர ஸ்ரீஸ்ரீமால், ஒருங்கிணைப்பாளர் அனில் கிச்சா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *