மூன்று ரயில் நிலையங்களுக்கு மிரட்டல்
சென்னை,தெற்கு ரயில்வே கீழ் செயல்பட்டு வரும் கிடங்கு கட்டுப்பாட்டாளர், இ – மெயில் முகவரிக்கு, நேற்று முன்தினம் மிரட்டல் செய்தி ஒன்று வந்துள்ளது.
இதில், மூன்று ரயில் நிலையங்களில் விபத்து நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
தெற்கு ரயில்வே கிடங்கு கட்டுப்பாட்டாளர் சார்பில், சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசில், நேற்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து, இ – மெயில் வழியாக, மிரட்டல் விடுத்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.