ரூ.5.81 லட்சம் மதிப்பில் இ- – சேவை மையம்
பெருங்குடி, பெருங்குடியில், வார்டு-182, 184 பகுதிவாசிகள், அரசு இ- – சேவை மையம் இன்மையால், அதிக கட்டணத்தில் தனியாரை நாடும் சூழல் இருந்து வருகிறது. இதனால், ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
அதன் விளைவாக, புதிய இ- – சேவை மையம் துவங்க, 2022ல் சென்னை மாநகராட்சிக்கு அனுப்பிய விண்ணப்பத்திற்கு, இப்பொழுது ஒப்புதல் கிடைத்துள்ளது.
எனவே, பள்ளி, கல்லுாரிகளில் சேர்க்கை நடைபெறும் இந்நேரத்தில், சாதிச்சான்று, வருமானச் சான்று, ஆதார் போன்றவற்றுக்காக விண்ணப்பிக்க, இம்மையம் பயனுள்ளதாக அமையும்.
மையம் துவக்க பூஜையில், மண்டல குழு தலைவர் மற்றும் செயற்பொறியாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.