அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
பிராட்வே, ஓய்வூதிய தொகையை, 6,750 ரூபாயாக உயர்த்தி வழங்கக்கோரி, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு, சென்னை மாவட்ட தலைவர் முத்துலிங்கம் தலைமை வகித்தார். இதில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து, மாவட்ட பொருளாளர் இந்திராணி கூறியதாவது:
அங்கன்வாடியில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்களுக்கு, 40 ஆண்டுகளாக, 2,000 ரூபாய்தான் ஓய்வூதியம் தரப்படுகிறது. பத்து ஆண்டுகளாக போராடியும் ஓய்வூதியத்தை அரசு உயர்த்தவில்லை. இதை, அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியமாக, 6,750 ரூபாய் வழங்க வேண்டும்.
ஓய்வூதியர்கள் இறந்தால், ஈமச்சங்கு நடந்த, 25,000 ரூபாயை அரசு வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.