கீழ்ப்பாக்கம் ஜி. ஹெச். ,சில் கர்ப்பிணியின் நகை திருட்டு
ஆவடியைச் சேர்ந்தவர் சாந்தி, 55. இவரது மகள், பிரசவத்திற்காக நேற்று முன்தினம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது, அவர் அணிந்திருந்த நகைகளை அகற்றும்படி, மருத்துவமனை ஊழியர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, அவர் அணிந்திருந்த நான்கரை சவரன் தங்க நகைகளை கழட்டி, தாய் சாந்தியிடம் கொடுத்துள்ளார்.
சாந்தி, நகைகளை தன் கையில் இருந்த சிறிய பையில் வைத்து, அறைக்கு வெளியில் வைத்துவிட்டு உள்ளே சென்றுள்ளார். சில மணிநேரத்திற்கு பின், திரும்பி வந்து பையை சோதித்தபோது, அதில் இருந்த நகைகள் மட்டும் திருடு போனது தெரிந்தது. அதிர்ச்சியடைந்தவர், இது குறித்து, கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரிக்கினறனர்.