கொளத்துாரில் போன் பறித்த ஜார்க்கண்ட் வாலிபர் கைது
கொளத்துார்,கொளத்துார், அவ்வை நகர் பகுதியை சேர்ந்தவர் குட்டுகுமார், 25. பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். சென்னை ரயில்வேயில் அசிஸ்டென்டாக, கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் 15ம் தேதி, மேயர் சிட்டிபாபு மேம்பாலம் அருகே, மொபைல் போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ஸ்கூட்டியில் வந்த நபர், குட்டுகுமாரிடமிருந்து மொபைல் போனை பறித்துக் கொண்டு மாயமானார்.
இதுகுறித்து, அவர் கொளத்துார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி’ காட்சிகளை ஆய்வு செய்து, கோவளத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வரும் மொபைல் போன் திருடனான, ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பரமேஸ்வரிபுஹாரி, 26, என்பவரை, நேற்று முன்தினம் மாலை கைது செய்தனர்.
அவனிடமிருந்து, திருடு போன மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது.