‘காவல் உதவி’ செயலி குறித்து விழிப்புணர்வு

மாணவிகள், பெண்கள், முதியவர்கள் ஆபத்து மற்றும் அவசர நேரங்களில் ஒரே பட்டனை அழுத்தி போலீசாரை அழைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ‘காவல் உதவி’ செல்போன் செயலியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் 4-ந் தேதி தொடங்கி வைத்தார்.

இந்த செயலியின் நன்மைகள், பயன்கள் குறித்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் 105 பள்ளிகள், 10 கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் 53 இடங்கள் என மொத்தம் 168 இடங்களில் போலீசார் நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

‘காவல் உதவி’ செயலி தொடங்கப்பட்ட 4 மாதங்களில் 514 பள்ளிக்கூடங்கள், 61 கல்லூரிகள் என மொத்தம் 575 கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்றுள்ளது. பள்ளி மாணவ-மாணவிகள் 17 ஆயிரத்து 443 பேர், கல்லூரி மாணவ-மாணவிகள் 4 ஆயிரத்து 95 பேர் என மொத்தம் 21 ஆயிரத்து 538 பேர் ‘காவல் உதவி’ செயலியை தங்களது செல்போனில் பதவிறக்கம் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *