லீசுக்கு பெற்ற ரூ. 23 ல ட்சம் தராத வீட்டு உரிமையாளருக்கு காப்பு
அண்ணா நகர், அண்ணா நகர் மேற்கு, ஏழாவது தெருவைச் சேர்ந்தவர் வீரேந்திர ஆனந்தகுமார், 56. இவருக்கு, சொந்தமான மற்றொரு வீடு, சாந்தி காலனி, ஏ.டி., பிளாக், நான்காவது தெருவில் உள்ளது.
கடந்த 2021ல் இந்த வீட்டை ஜார்ஜ், 40 என்பவருக்கு, 23 லட்சம் ரூபாய்க்கும், ‘லீசு’க்கு விட்டுள்ளார். லீஸ் முடிந்து, 2023ல் வீட்டை காலி செய்வதாக கூறி, பணத்தை ஜார்ஜ் திருப்பி கேட்டுள்ளார். வீரேந்திர ஆனந்தகுமார் பணத்தை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்தார்.
ஜார்ஜ் புகார் அளித்ததை அடுத்து, அண்ணா நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தபோது, 23 லட்சம் ரூபாயை ஏமாற்றியது உறுதியானது.
மேலும், ஜார்ஜ் குடியிருந்த வீட்டின்மீது, வீரேந்திர ஆனந்தகுமார், ஏற்கனவே வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்றிருப்பதும், விரைவில் வீடு ஜப்தி செய்யப்பட உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, வீரேந்திர ஆனந்தகுமாரை போலீசார் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.