புகார் பெட்டி – மத்திய சென்னை – பிரதான இணைப்பு சாலையில் அகற்றிய வேகதடையால் அவதி
அண்ணா நகர் மண்டலம், 101வது கிழக்கு அண்ணா நகர் பகுதியில், ‘எப்’ பிளாக் உள்ளது. இங்கு, ஒன்று முதல் பல்வேறு தெருக்கள், பிரதான சாலைகளில், 400க்கும் மேற்பட்ட குடும்பங்களில், ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர்.
ஒன்று மற்றும் மூன்றாவது பிரதான சாலையை இணைக்கும் முக்கிய பகுதியாக, ஒன்பதாவது தெருவில் வேகத்தடை இருந்தது. இதன் அருகில் வசிக்கும் செல்வாக்கு பெற்ற சிலரின் வசதிக்காக வேகத்தடை அகற்றப்பட்டது.
இதனால், அவ்வழியாக செல்வோர் அதிவேகமாக வாகனத்தில் செல்வதால், தினமும் விபத்து ஏற்படுகிறது. வயதானோர் சாலையில் நடக்க முடியாமல் தவிக்கிறோம். இதுகுறித்து, பலமுறை மாநகராட்சியில் புகார் அளித்து பயனில்லை. மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும்.
– ரகுநாதன்,
அண்ணா நகர்