அடுக்குமாடி குடியிருப்பாகுது ஸ் ரீபிருந்தா தியேட்டர்
சென்னை, வடசென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த ஸ்ரீ பிருந்தா தியேட்டர் விரைவில் இடிக்கப்பட்டு, அங்கு அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கட்டப்பட உள்ளது.
பெரம்பூர் மாதவம் நெடுஞ்சாலையில், லோகநாதன் செட்டியாரால் கட்டப்பட்ட ஸ்ரீ பிருந்தா தியேட்டர், 1985 ஏப்.,14ல் திறக்கப்பட்டது. லோகநாதனின் மறைவுக்கு பின், அவரின் மகன்களால் நடத்தப்பட்டு, பின் குத்தகைக்கு விடப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன், ‘டிராகன்’ படம் கடைசியாக திரையிடப்பட்டு, தியேட்டர் தற்போது மூடு விழா கண்டுள்ளது.
இங்கு கடந்த 40 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றிய பன்னீர்செல்வம் கூறியதாவது:
மூடப்பட்டிருந்தன. அப்போது முதல், தனி தியேட்டர்களுக்கு போதிய வருமானம் இல்லை. அதிலும், இன்று புதுப்படங்களும் ஓ.டி.டி., போன்ற தளங்களில் வெளியாவதால், தனி தியேட்டர்கள் அதிக பாதிப்பை சந்தித்தன. வேறு வழியின்றி தியேட்டரை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பான தியேட்டர் என, வடசென்னையில் பெயர் எடுத்திருந்தது நிறைவான விஷயம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த தியேட்டர் இடத்தை, தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது. இந்த இடத்தில் அடுக்கு மாடி குடியிருப்புடன், பிரமாண்ட வணிக வளாகம் கட்டவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.