டி .எம் .எல் .டி ., படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை:தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில், டி.எம்.எல்.டி., என்ற மருத்துவ ஆய்வக தொழில்நுட்புனர் டிப்ளமா படிப்பில் சேர, வரும், 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு:
தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில், 2024 – 25ம் ஆண்டுக்கான, டி.எம்.எல்.டி., படிப்புக்கான பயிற்சி துவங்கப்பட உள்ளது. மாநகராட்சி பணியாளர்களின் வாரிசு, மாநகராட்சி பள்ளிகளில் படித்தவர்கள், அரசு மற்றும் அரசு சாரா பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இப்படிப்பில் சேர, பிளஸ் 2ல் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள், மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலுவலகத்தில், இன்று முதல் வரும் 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
காலை, 10:00 முதல் மாலை 5:00 மணி வரை அனைத்து நாட்களிலும் விண்ணப்பிக்கலாம்.
மொத்தம், 30 இடங்கள் உள்ள நிலையில், இரண்டு ஆண்டுகால பயிற்சி வகுப்புகள், ஆங்கில மொழியில் நடத்தப்படும். மாத கல்வி கட்டணம் 700 ரூபாய்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.