சிறு மழைக்கே குளமான வ.உ.சி., தெரு
வளசரவாக்கம்:வளசரவாக்கம் மண்டலம், 152வது வார்டில் கைக்கான் குப்பம், வ.உ.சி., தெரு உள்ளது. இது, ராமாபுரம் மற்றும் கே.கே., நகரை இணைக்கும் பிரதான சாலையாக உள்ளது.
நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் இருந்த இச்சாலை, தற்போது மாநகராட்சி பராமரிப்பில் உள்ளது.
நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் இருந்தபோது, 20 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று பெய்த திடீர் மழையால், வ.உ.சி., தெருவில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் முதல் பாதசாரிகள் வரை அவதிப்பட்டனர்.