மத்திய அமைச்சரை கண்டித்து காங்கிரசா ர் ஆர்ப்பாட்டம்
எம்.கே.பி.நகர்:தமிழகத்திற்கு கல்வி நிதியை வழங்க, மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதான் மறுப்பதாகவும், அதை கண்டித்தும், காங்கிரஸ் வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் டில்லிபாபு தலைமையில், எம்.கே.பி.நகரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் பங்கேற்றோர், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை கூறியதாவது:
பார்லிமென்டில் மும்மொழி கொள்கை குறித்து, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசும்போது, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் நாகரிகமற்றவர்கள் என்று கூறினார். அவர், தமிழக மக்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
தர்மேந்திர பிரதான் தமிழகம் வரும்போதெல்லாம் காங்கிரார் கருப்பு கொடி காட்டுவர்.
எங்கள் குழந்தைகள் என்ன படிக்க வேண்டுமென்பதை, அவர்கள் தீர்மானிப்பர். மொழியை நீங்கள் திணிக்க வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
.