மினி பஸ்கள் இயக்க 8 பேருக்கு அனுமதி
சென்னை, சென்னையில் மினி பஸ்கள் இயக்க, முதற்கட்டமாக எட்டு பேருக்கான அனுமதி ஆணையை, கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வழங்கினார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், மே 1 முதல் மினி பேருந்துகள் இயங்கப்பட உள்ளன. அதற்காக கண்டறியப்பட்ட புதிய வழித்தடங்களில், பேருந்து இயக்க ஆர்வம் உள்ளோரிடம் விண்ணப்பிக்கலாம் என, அரசு அறிவித்தது.
அதன்படி, சென்னை வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் உள்ள நான்கு வழித்தடங்களில், தலா இரண்டு விண்ணப்பங்கள் என, மொத்தம் எட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவர்களுக்கான செயல்முறை ஆணையை, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வழங்கினார்.
விண்ணப்பதாரர்கள், நடப்பில் உள்ள அனைத்து ஆவணைங்களையும், ஏப்.,30க்குள் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.