பெரிய மீன்கள் வரத்தால் களைகட்டிய காசிமேடு

காசிமேடு, தமிழகத்தில், மீன்பிடித்தடை காலம் ஏப்., 15 முதல் ஜூன் 14ம் தேதி வரை அமலில் இருக்கும். ஏப்., மாதத்திற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், விடுமுறை தினமான நேற்று அதிகாலை முதலே, காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில், மீன்களின் வரத்து அதிகமாக இருந்தது.

குறிப்பாக வஞ்சிரம், பாறை, கொடுவா, கேரை உள்ளிட்ட பெரிய மீன்களின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. அதேபோல, சங்கரா, கானாங்கத்த உள்ளிட்ட சிறிய மீன்களின் வரத்தும் அதிகமாக இருந்தது. அதேபோல, அரிய வகை மீனான சூரிய மீன் ஒன்று மீனவர் வலையில் பிடிபட்டது; இது 300 கிலோ அளவில் இருந்தது.

வரத்து அதிகமாக இருந்தாலும், கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் விலையில் பெரிய மாற்றமில்லை.

மீன் கிலோ (ரூ.)

வஞ்சிரம் 900

கருப்பு வவ்வால் 500 – 600

வெள்ளை வவ்வால் 1,000 – 1,200

நெத்திலி 300 – 350

கடம்பா 300 – 350

கானாங்கத்த 150 – 200

கேரை 100 – 130

சூரை 100 – 130

பாறை 400 – 500

கடல் விரால் 400 – 500

இறால் 300 – 400

டைகர் இறால் 1,000 – 1,200

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *