மெட்ரோ நிலையங்களில் ரூ.10.84 கோடியில் பணி
சென்னை, சென்னையில், முதல் மெட்ரோ ரயில் சேவை துவங்கி 10 ஆண்டுகளை நெருங்க உள்ளது. இதையடுத்து, மெட்ரோ ரயில் சேவையிலும், கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்திலும் பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ளன.
எனவே, இதற்கு ஏற்றாற்போல் ரயில் இயக்கம் மற்றும் பயணியருக்கான வசதிகளை அளிப்பதற்கான மேம்பாட்டு பணிகளை, மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
பழுதை சரிசெய்வது, புதிய தொழில்நுட்பம் அமைப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளோம்.
அதே போல், ஆலந்துார் மெட்ரோ ரயில் நிலையத்திலும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள உள்ளோம். இந்த பணிகளை 10.84 கோடி ரூபாயில் மேற்கொள்ள ‘டெண்டர்’ வெளியிட்டுள்ளோம்.
விரைவில், நிறுவனத்தைத் தேர்வு செய்து, ஓரிரு மாதங்களில் பணிகளை துவங்குவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.