கடையில் திருட முயற்சி சிறுவர்கள் கைது
அசோக் நகர்: மேற்கு மாம்பலம், பிருந்தாவன் தெருவில் பிரபல ‘வீக்கோ’ நிறுவன பொருட்களின் கடை நடத்தி வருபவர் மகேஷ்குமார், 67. கடந்த 7ம் தேதி இரவு கடையை மூடி, வீட்டிற்கு சென்றார்.
அன்றைய தினம் நள்ளிரவு, கடையின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி நடந்தது. பணம் ஏதும் கிடைக்காமல் அங்கிருந்து சென்றுள்ளனர்.
இது குறித்து அசோக் நகர் போலீசார் விசாரித்தனர். இதில், இரு சிறுவர்கள் திருட முயன்றது தெரிய வந்தது.
அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து பைக்கை பறிமுதல் செய்தனர்.