விசாகப்பட்டினம் – பெங்களூருக்கு சிறப்பு ரயில்கள்

சென்னை, ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து, சென்னை பெரம்பூர் வழியாக, கர்நாடகா மாநிலம் பெங்களுருக்கு, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

★ விசாகப்பட்டினத்தில் இருந்து வரும் 9, 16, 23ம் தேதிகளில், மாலை 3:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், சென்னை பெரம்பூர் வழியாக நாளை நண்பகல் 12:45 மணிக்கு, எஸ்.எம்.வி.டி., பெங்களூருக்கு செல்லும்

★ எஸ்.எம்.வி.டி., பெங்களூருவில் இருந்து, வரும் 10, 17, 24ம் தேதிகளில் மாலை 3:50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், பெரம்பூர் வழியாக நாளை நண்பகல் 12:30 மணிக்கு விசாகப்பட்டினம் செல்லும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *