பணியின் போது மாடியில் இருந்து விழுந்த மேஸ்திரி பலி
கொடுங்கையூர் கொடுங்கையூர், பின்னி நகர் 2வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் அருள்தாஸ், 54; கட்டட மேஸ்திரி. இவருக்கு பத்மாவதி என்ற மனைவியும்; மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.
இவர், கொடுங்கையூர், அருள் நகர் 2வது தெருவில் உள்ள வீட்டில், ஒரு மாதமாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் முதல் தளத்தில் ஸ்டுல் மேல் நின்று, பணி செய்யும்போது, கால் இடறி கீழே விழுந்தார்.
இதில் படுகாயமடைந்தவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று உயிரிழந்தார். கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.