குடிநீர் வாரிய பணிமனை அலுவலகம் இடமாற்றம்
சென்னை, மார்ச் 8: சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட பணிமனை அலுவலகம் – 107, கதவு எண்.4, நரசிம்மன் தெரு, அமைந்தகரை என்ற முகவரியில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், வரும் 10ம் தேதி முதல், கதவு எண்.65, தண்ணீர் தொட்டி சாலை, எம்.எம்.டி.ஏ காலனி, அரும்பாக்கம் என்ற புதிய முகவரியில் செயல்படும். எனவே, பொதுமக்கள் குடிநீர் மற்றும் கழிவுநீர் சம்பந்தப்பட்ட புகார்கள் மற்றும் குடிநீர் வரி செலுத்த இந்த புதிய முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இதற்காக, உதவிப் பொறியாளரை 8144930106 என்ற எண்ணிலும், துணை பகுதிப் பொறியாளரை 8144930314 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.