வாலிபர் கொலை வழக்கில் தி.மு.க., கவுன்சிலர் தம்பி கைது
அம்பத்துார், அம்பத்துார் டீச்சர்ஸ் காலனி, ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் தினேஷ் பாபு, 38; ஒப்பந்ததாரர். கடந்த மாதம் 28ம் தேதி, தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள, பேட்மிட்டன் அரங்கின் வெளியே, மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
அம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். மாதவரத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன், தினேஷ்பாபு கள்ளக்காதலில் இருந்து உள்ளார்.
எச்சரித்தும் தினேஷ்பாபு கண்டுகொள்ளாததால், பெண் வீட்டார் கூலிப்படையை ஏவி அவரை கொன்றது தெரிய வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய ஐந்து பேர், மார்ச் 2ல் கைது செய்யப்பட்டனர்.
தலைமறைவாக இருந்த இளம்பெண்ணின் தந்தை செல்வராஜ், 55, கொலைக்கு தீட்டம் தீட்டி கொடுத்த தனஞ்செழியன், 24, வழக்கறிஞர்கள் சதீஷ்குமார், 31, விஜயகுமார், 40, அம்பத்துார் மங்களபுரத்தைச் சேர்ந்த சுஜித், 21, ஆகிய ஐந்து பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதில், இளம்பெண்ணின்தந்தை செல்வராஜ், சென்னை மாநகராட்சி 27வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ரவிசந்திரனின் தம்பி ஆவார்.