2 போலீசார் ‘அட்மிட் ‘ ஆட்டோ டிரைவர்கள் கைது
பெரம்பூர், செம்பியம் திருவள்ளூர் சாலையில், கடந்த 4ம் தேதி நள்ளிரவு, செம்பியம் போலீசாரான வினோத்குமார், 36, தட்சிணாமூர்த்தி, 40 ஆகிய இருவர், பைக்கில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஆட்டோவில் சிலர் மது போதையில் சத்தமிட்டு வேகமாக சென்றனர்.
பைக்கை நிறுத்தச் சொன்ன போலீசாரின் பைக்கில், அவர்கள் மோதிவிட்டு சென்றனர். இதில், கீழே விழுந்த போலீசார் இருவரும் எலும்பு முறிவு, பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற வருகின்றனர்..
அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிந்து, போலீசாரை காயமடைய வைத்த, கொளத்துாரை சேர்ந்த ஆட்டோ டிரைவர்களான கோவிந்தராஜ், 24, பாலாஜி,22 மற்றும் டில்லிபாபு, 26 ஆகிய மூவரையும் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர். கோவிந்தராஜ் மீது 11 வழக்குகளும், பாலாஜி மீது ஐந்து வழக்குகளும் உள்ளதாக போலீசார் கூறினர்.