2,000 பேருக்கு இருக்கைகள் வழங்கி முதல்வர் பிறந்த நாளில் சிறப்பிப்பு
சென்னை, தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, வேளச்சேரியில் நேற்று முன்தினம் இரவு, வாழ்த்தரங்கம் நடந்தது.
இதில், அமைச்சர்கள் நேரு, சுப்பிரமணியன், தமிழக சிறுபான்மை நலப்பிரிவு வாரிய தலைவரும், முன்னாள் எம்.பி.,யுமான பீட்டர் அல்போன்ஸ், மத்திய சென்னை எம்.பி., தயாநிதி, தென்சென்னை எம்.பி., தமிழச்சி ஆகியோர், முதல்வரை வாழ்த்தி பேசினர்.
இதில், தி.மு.க., தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், 2,000 பிளாஸ்டிக் இருக்கைகள் போடப்பட்டன. கூட்டம் முடிந்தபின், தி.மு.க., தொண்டர்கள், பொதுமக்கள் அமர்ந்திருந்த இருக்கையை, அவரவர் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.
இந்நிகழ்ச்சியை, தி.மு.க.,வின் சென்னை தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளரும், 176வது வார்டு கவுன்சிலருமான ஆனந்தம் ஏற்பாடு செய்திருந்தார்.
நிகழ்ச்சியில், தி.மு.க., – – எம்.எல்.ஏ.,க்கள் அரவிந்த் ரமேஷ், கணபதி, பிரபாகர் ராஜா, துணை மேயர் மகேஷ்குமார், காசி முத்துமாணிக்கம், கவுதமன், நிவேதா ஜெசிகா, மனோகரன், வாசுகி பாண்டியன், தி.மு.க., கவுன்சிலர்கள் விஸ்வநாதன், பாஸ்கரன், பகுதி செயலர் சேகர், துரை கபிலன், ரமேஷ், ஜெகதீசன் மற்றும் தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.