அந்தமானில் மோசமான வானிலை சென்னை திரும்பிய விமானம்
சென்னைசென்னையில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்ட விமானம், மோசமான வானிலை காரணமாக, மீண்டும் சென்னைக்கு திரும்பியது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து, அந்தமானுக்கு நேற்று அதிகாலை 4:40 மணிக்கு, இண்டிகோ விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில், 162 பேர் இருந்தனர். அந்தமான் வான்வெளியை நெருங்கியபோது மோசமான வானிலை நிலவியது. பலத்த சூறைக்காற்றும் வீசியுள்ளது.
அந்தமான் விமான நிலைய தகவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி, தறையிறக்க அனுமதி கேட்டார். தற்போதைய சூழலில், இங்கு தறையிறக்குவது சரியல்ல என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, விமானம் வானில் வட்டமடித்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில், சென்னைக்கே திரும்ப உத்தரவிட்டுள்ளனர். பின் விமானம், காலை 8:00 மணிக்கு சென்னை வந்தடைந்தது.
உள்ளே இருந்து பயணியர் மற்றும் விமான குழுவினர், ஒய்வு பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். அந்தமானில் வானிலை சீரடைந்த பின், விமானம் காலை 11:30 மணிக்கு புறப்பட்டு சென்றது.