அம்மன் கோவில்களில் வளைகாப்பு

திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட அக்கைய்யாநாயுடு சாலையில் தணிகாசலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், நேற்று ஆடிப்பூரத்தையொட்டி, காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து திரளான பெண்கள் அம்மன் கோவிலுக்கு வந்து பவளையல் அணிவித்தும், சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர். மேலும், சில பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.

இதே போல், திருத்தணி மடம் கிராமத்தில் உள்ள படவேட்டம்மன், பெரிய தெருவில் உள்ள தணிகை மீனாட்சியம்மன், மத்தூர் மகிஷா சுரமர்த்தினி அம்மன், திருத்தணி காந்தி நகரில் உள்ள துர்க்கையம்மன் உள்பட திருத்தணி ஒன்றியத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களில் ஆடிப்பூரம் ஓட்டி, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *