சி. ஆர். பி. எப்., வீரர் வீட்டில் பூட்டுடைத் து 30 ச வரன் திருட்டு
ஆவடி, பட்டாபிராம், உழைப்பாளர் நகரை சேர்ந்தவர் ஜெகன், 40. சித்துார் சி.ஆர்.பி.எப்., போலீஸ் ஏட்டு. அமராவதி, நேற்று முன்தினம், பாடியில் உள்ள உறவினர் வீட்டில், பெண் பார்க்கும் நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் சென்றார். நேற்று காலை 7:30 மணிக்கு, வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த, 30 சவரன் தங்க நகை திருடு போனது தெரிந்தது.
புகாரின்படி, பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிந்து, திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.