மளிகை கடைக்காரரை தாக்கிய 3 பேர் கைது; 3 பேருக்கு வலை
சென்னை, வில்லிவாக்கம் தாதன்குப்பம், ஆர்.கே.சாலையை சேர்ந்தவர் முருகன், 54. இவர், அதே பகுதியில், சாந்தியப்பன் பிரதான தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு, பிப்., 27ல், ஆறு பேர் வந்துள்ளனர். சிகரெட் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வாங்கிய பின், பணம் தர மறுத்துள்ளனர
இதனால், ஆறு பேருக்கும், முருகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அவர்கள், முருகனை தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி, கல்லா பெட்டியில் இருந்து, 2,500 ரூபாயை பறித்து தப்பினர்.
இதுகுறித்து முருகன் அளித்த புகாரையுடுத்து, தலைமை செயலக காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சென்னை புரசைவாக்கம் திடீர் நகரைச் சேர்ந்த சுரேஷ், 21; சதீஷ், 22, ஓட்டேரியைச் சேர்ந்த அருண்ராஜ், 25 ஆகியோரை கைது செய்துள்ளனர்.
இவர்கள் மீது, ஏற்கனவே ஆறுக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன என்பது தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள மற்ற மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.