அய்யப்பன் தாங்கலில் மீண்டும் சிற்றுந்து சேவை துவக்கம்
அய்யப்பன்தாங்கல், அய்யப்பன்தாங்கல் பேருந்து பணிமனையில் இருந்து, தடம் எண்: எஸ்22 சிற்றுந்து, கொளத்துவாஞ்சேரி, இ.வி.பி., பிரபு அவென்யூ, பரணிபுத்துார், பட்டூர் வழியாக, மாங்காட்டிற்கு இயக்கப்பட்டு வந்தது.
அதேபோல், அய்யப்பன்தாங்கலில் இருந்து, ஏ.என்.இ., சாலை வழியாக, நுாம்பல், வானகரம், குமணன்சாவடி வரை தடம் எண்: எஸ்23 சிற்றுந்தும் இயக்கப்பட்டு வந்தது.
இந்த இரு சிற்றுந்து சேவைகளும், சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டன.
இதையடுத்து, இந்த சிற்றுந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, எஸ்22 சிற்றுந்து சேவை மீண்டும் துவங்கப்பட்டது. அதன்படி, எஸ்23 சிற்றுந்தையும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், அய்யப்பன்தாங்கல் பேருந்து நிலையத்திலிருந்து குமணன்சாவடி வரை, மீண்டும் எஸ்23 சிற்றுந்து சேவை, நேற்று துவங்கப்பட்டது.
இந்த துவக்க விழாவில், அமைச்சர் நாசர் கொடியசைத்து, தடம் எண்: எஸ்23 சேவையை துவக்கி வைத்தார்.