சி.ஐ.டி , காலனியில் ‘டிவி, ஏசி ‘ திருட்டு
சென்னை, சென்னை மயிலாப்பூர், சி.ஐ.டி., காலனி பிரதான சாலையைச் சேர்ந்தவர் துரை, 59; தொழில் அதிபர். இவரின் வீட்டில் பராமரிப்பு பணி நடப்பதால், எல்.இ.டி., ‘டிவி’ மற்றும் நான்கு குளிர்சாதன பெட்டிகளையும், காப்பர் கம்பிகளையும் கழற்றி வீட்டு வளாகத்தில் வைத்துள்ளார். இதன் மதிப்பு, 3.50 லட்சம் ரூபாய்.
மர்ம நபர்கள், பிப்., 20ல், எல்.இ.டி., ‘டிவி’ – குளிர்சாதன பெட்டிகள் மற்றும் காப்பர் கம்பிகளை திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம், தி.மு.க., – எம்.பி., கனிமொழி வீட்டருகே நடந்துள்ளது.
இதுகுறித்து, மயிலாப்பூர் காவல் நிலையத்தில், துரை புகார் அளித்துள்ளார். எஸ்.ஐ., கார்த்திக் ராஜா சம்பவ இடம் சென்று விசாரித்து உள்ளார். ஆனால், சி.எஸ்.ஆர்., எனப்படும் புகார் ஏற்பு ரசீது கூட தராமல் இழுத்தடித்து வருவதாக, துரை தெரிவித்தார்.