புதிய தீயணைப்பு நிலையம் படப்பையில் திறப்பு விழா
படப்பை,படப்பையில் தீ விபத்து மற்றும் வேறு அசம்பாவிதம் நடந்தால், மீட்பு பணி மேற்கொள்ள தாமதம் ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து, படப்பை பெரியார் நகரில், படப்பை ஊராட்சிக்கு சொந்தமான கட்டடம், தீயணைப்பு நிலையமாக மாற்றியமைக்கப்பட்டது.
அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், காஞ்சிபுரம் மாவட்ட குழு தலைவர் ஆ.மனோகரன் தலைமை தாங்கினார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், நிலையத்தைதிறந்து வைத்தார்.
இதில், ஸ்ரீபெரும்புதுார் காங்., – எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும், குன்றத்துார் ஒன்றியத்தில், 1.77 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கட்டடங்களையும், அமைச்சர் அன்பரசன் நேற்று திறந்து வைத்தார்.