மூன்று மண்டலங்களில் இரண்டு நாள் குடிநீர் ‘கட்’
சென்னை, மெட்ரோ ரயில் பணிக்காக, நுங்கம்பாக்கம் பகுதியில் குடிநீர் குழாய் மாற்றி இணைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் வரும், 4, 5ம் தேதிகளில், தேனாம்பேட்டை மண்டலத்தில், சூளைமேடு, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, தி.நகர், ராயப்பேட்டை, கோபாலபுரம், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் குடிநீர் நிறுத்தப்படும்.
கோடம்பாக்கம் மண்டலத்தில், மேற்கு மாம்பலம், சி.ஐ.டி.,நகர், மேற்கு சைதாப்பேட்டை; அடையாறு மண்டலத்தில் சைதாப்பேட்டை பகுதிக்கும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்.
பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக குடிநீரை சேமித்து வைத்து கொள்ள வேண்டும். அவசர குடிநீர் தேவைக்கு, https://cmwssb.tn.gov.in என்ற இணைய தளத்தில் முன்பதிவு செய்து, குடிநீர் பெற்றுக் கொள்ளலாம். அழுத்தம் குறைவாக, இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு, லாரி குடிநீர் வழங்கப்படும் என, அதிகாரிகள் கூறினர்.