சாலை நடுவே வடிகால் பணி கடும் போக்குவரத்து நெரிசல்
சாலையின் நடுவே மழைநீர் வடிகால் பணியால், ஒரு வழிப்பாதையாக மாற்றிய ஐ.சி.எப்., சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அண்ணா நகர் மண்டலம், வில்லிவாக்கம் அருகில், ஐ.சி.எப்., பகுதி உள்ளது. இங்கு, வில்லிவாக்கத்தில் இருந்து, அயனாவரத்தை நோக்கி செல்லும் பிரதான பாதையான, ஐ.சி.எப்., பிரதான சாலை உள்ளது.
இச்சாலையின் நடுவே, கம்பர் அரங்கத்தின் அருகில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.
இதனால், 100 மீட்டருக்கு மேல், ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதால், ஒரே பாதையில் இரு பேருந்துகள் செல்லும் வழியாக உள்ளது.
சிறிய சாலையில் இருவழி செல்லும் வாகனங்கள் செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பணிகளை விரைந்து முடித்து, இரு வழிப்பாதையை பயன்பாட்டிற்கு கொண்டுவர, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘எம்.டி.எச்., சாலை வழியாக, ‘ஆர்ச்’ வடிவில் பழைய வடிகால் செல்கிறது. அயனாவரம், ஐ.சி.எப்., பகுதியில் தேங்கும் மழைநீரை, புதிய வடிகால் வாயிலாக, ‘ஆர்ச்’ வடிகாலில் இணைத்து, ஐ.சி.எப்., கால்வாய்க்கு செல்லும் வகையில் பணி நடக்கிறது. விரைவில் பணி முடியும்’ என்றனர்.