மூன்று மாடி க ட்டடத்தில் தீ விபத்து
கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், புஷ்பா நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் பர்ஹான், 32. இவர், விளம்பர நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான மூன்று மாடி கட்டடம், கோடம்பாக்கம் புலியூர், 2 வது பிரதான சாலையில் அமைந்துள்ளது.
இந்த கட்டடத்தின்இரண்டாவது தளத்தில், ஆறு மாதங்களாக பழைய பர்னிச்சர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பர்ஹான் வைத்திருந்தார்.
கடந்த 25ம் தேதி மாலை இரண்டாவதுதளத்தில் உள்ள பழைய ஜன்னல்களை அகற்றிவிட்டு, புது ஜன்னல்கள் அமைத்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு 11:00 மணியளவில் இரண்டாவது தளத்தில் தீ பற்றி எரிவதை கண்ட அப்பகுதி மக்கள், போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அசோக் நகர், கிண்டி, சைதாப்பேட்டை மற்றும் கோயம்பேடு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து, இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின், தீயை அணைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ பிடித்தது தெரியவந்தது. இதுகுறித்து, கோடம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.