சிவில் சர்வீசஸ் கேரம்: சென்னை ‘சாம்பியன்’
சென்னை மத்திய சிவில் சர்வீசஸ் விளையாட்டு வாரியம் சார்பில், அகில இந்திய சிவில் சர்வீசஸ் கேரம் போட்டி, மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் நடந்தது.
இதில், சென்னை, மும்பை, ஹைதராபாத் உட்பட வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என, நான்கு மண்டலங்களில் இருந்தும், ஏராளமான வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இருபாலர் அணி மற்றும் தனி நபர் பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.
ஆண்கள் பிரிவில் 39 அணிகளும், பெண்கள் பிரிவில் 31 அணிகளும் பங்கேற்றன. தனி நபரில் 226 ஆண்களும், 165 பெண்களும் பங்கேற்றனர். வெட்ரன் பிரிவில், 67 பிரிவுகள் என, மொத்தம் 877 போட்டிகள் நடந்தன.
இதில், அணி பிரிவில் ஆண்களில் சென்னை மண்டலம் 3 – 2 என்ற கணக்கில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி முதலிடத்தை பிடித்தது.
பெண்களில் சென்னை மண்டலம், 2 – 1 என்ற கணக்கில் பீஹாரை தோற்கடித்து முதலிடத்தை கைப்பற்றியது. தனிநபர் இறுதிப் போட்டியில், சென்னை வீரர் அப்துல் ரகுமான், மும்பை வீரர் பரபுல் என்பவரை வீழ்த்தினார்.
பெண்களில், சென்னை வீராங்கனை நாகஜோதி, பீஹார் வீராங்கனை சந்தியாவை தோற்கடித்து முதலிடத்தை பிடித்தார். நான்கு போட்டியிலும், சென்னை மண்டல அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.