கூரை இல்லாத ராயபுரம் ரயில்வே ‘ஷெட்’ சரக்குகளுக்கு பாதுகாப்பில்லாத அவலம்
சென்னை உள்ளிட்ட சில முக்கிய ரயில் நிலையங்களில் சரக்குகள் கையாளும் வசதியை தெற்கு ரயில்வே படிப்படியாக கொண்டு வருகிறது.
ராயபுரத்தில் இருந்து அசாம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையே பார்சல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆடைகள், மோட்டார் உதிரி பொருட்கள், ஸ்டீல் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் கையாளப்படு
இதுகுறித்து, வியாபாரிகள் சிலர் கூறியதாவது:
ராயபுரம் ரயில் நிலையத்தில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு சரக்குகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து பொருட்களை கொண்டு வந்து, வியாபாரிகள் இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
பொருட்கள் கையாள்வது தற்போது அதிகரித்து வருகிறது. இதனால், ரயில்வேக்கும் வருமானம் கிடைக்கிறது. வியாபாரிகளும் தங்களது பொருட்களை எளிமையாகக் கொண்டு செல்ல முடிகிறது. ஆனால், இங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை. நடைமேடைகளில் இன்னும் கூரை வசதிகள் இல்லை.
இதனால், மழை மற்றும் வெயில் காலத்தில் பொருட்கள் சேதமடைய வாய்ப்புகள் உள்ளன. எனவே, சரக்குகளை கையாளும் பகுதிகளை மேம்படுத்திடவும், பணியாளர்களுக்கு உணவகம், ஓய்விடம், கழிப்பறை வசதி மற்றும் பாதுகாப்பு சுற்றுச்சுவர்களை அமைக்க வேண்டும்.
கின்றன. ஆனால், இந்த ஷெட்டில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை, என புகார் எழுந்துள்ளது.\
இவ்வாறு அவர்கள் கூறினர்.