பெட்ரோல் பங்க் ஊழியரிடம் நூதன முறையில் ரூ.30,000 அபேஸ்
பெரம்பூர்: பெரம்பூர் சின்னையா நியூ காலனியை சேர்ந்தவர் ஆகாஷ் (19). இவர் பெரம்பூர் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை இந்த பெட்ரோல் பங்க் வந்த 2 பேர், 10 லிட்டர் ஆயில் வேண்டும். மேலும், 30 ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை வேண்டும். இவற்றை நாங்கள் சொல்லும் இடத்திற்கு கொண்டு வந்து தர வேண்டும், என்றனர். அதன்படி, அவர்களுடன் சென்றபோது, ஆகாஷை நிற்க வைத்துவிட்டு, 30 ஆயிரம் ரூபாய் சில்லறை பணத்தை பெற்றுக் கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.