28 அங்கன்வாடி மையங்கள் ரூ.1 கோடியில் சீரமைப்பு
சோழிங்கநல்லுார்:சோழிங்கநல்லுார் மண்டலத்தில், 194 முதல் 200 வரை உள்ள வார்டுகளில், 28 அங்கன்வாடி மையங்கள் உள்ளன.
இதில், பல கட்டடங்கள் மிகவும் சேதமடைந்து, ஆபத்தாக உள்ளன. அவற்றை சீரமைக்க வேண்டும் என, பெற்றோர், அங்கன்வாடி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, ஒரு கோடி ரூபாயில், 28 அங்கன்வாடி மையங்களை சீரமைக்க, மாநகராட்சி முடிவு செய்தது. இதற்கான பணி, அடுத்த மாதம் துவங்கும் என, அதிகாரிகள் கூறினர்.