பழவேற்காடு கடலில் மூழ்கி தனியார் வங்கி ஊழியர் பலி

பழவேற்காடு:ராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ், 37; தனியார் வங்கி ஊழியர். நண்பர்களுடன் பழவேற்காடுக்கு நேற்று, சுற்றுலா சென்றார்.

படகு சவாரி செய்து, கடலில் குளித்து, ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த ராட்சத அலையில், கடலுக்கு இழுத்து செல்லப்பட்டார்.

நீரில் மூழ்கி மயங்கிய நிலையில் இருந்தவரை நண்பர்கள் மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனர். உடனடியாக, பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

திருப்பாலைவனம் போலீசார், தினேஷின் உடலை கைப்பற்றி, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

தடையை மீறி படகு சவாரிக்கு, சுற்றுலாப் பயணிரை அழைத்து சென்ற படகோட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *