தாய் இறந்த சோகத்தில் மகன் துாக்கிட்டு தற்கொலை
திருவொற்றியூர்:எண்ணுார், சத்தியவாணி முத்துநகரைச் சேர்ந்த தனபால்ராஜ் மனைவி சாமுவேல்; 22. இவரது தாய் பிழவியா தேவி, 50.
கடன் தொல்லை காரணமாக, பிழவியாதேவி, எண்ணுார், தாழங்குப்பம் கடலில் குதித்து, கடந்தாண்டு, அக்., மாதம் தற்கொலை செய்துக் கொண்டார்.
தாய் இறந்ததில் இருந்து மன உளைச்சலில் இருந்த சாமுவேல், இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால், உறவினர்கள் காப்பாற்றி விட்டனர்.
இந்நிலையில், நேற்று மதியம், வீட்டில் தந்தை உறங்கிக் கொண்டிருந்த நிலையில், தாயின் புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
எண்ணுார் போலீசார், இறந்த வாலிபரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.