பொதுத்தேர்வு பள்ளியில் பெற்றோருக்கு அனுமதி
மீனம்பாக்கம்:சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு, கடந்த 15ம் தேதி முதல் நடந்து வருகிறது.
மீனம்பாக்கத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிக்கு தேர்வு எழுத பல பள்ளிகளின் மாணவர்கள் வருகின்றனர்.
அவர்களை அழைத்து செல்ல வரும் பெற்றோர், வாகனங்களுடன் சாலையில் காத்திருப்பதால், பழவந்தாங்கல் சர்வீஸ் சாலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து நம் நாளிதழில், படத்துடன்கூடிய செய்தி வெளியானது.
இதையடுத்து, தேர்வு முடியும் நேரத்தில், மாணவ – மாணவியரின் பெற்றோரை, பள்ளி வளாகத்தினுள் இருப்பதற்கு, பள்ளி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டது.