சென்னை -கும்மிடிப்பூண்டி மின்சார ரயில்கள் ரத்து: பராமரிப்பு பணி காரணமாக இன்று தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை, பிப்.24: பராமரிப்பு பணி காரணமாக இன்று சென்னை – கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: பொன்னேரி – கவரப்பேட்டை ரயில் நிலையங்கள் இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், அந்த வழித்தடத்தில் செல்லும் புறநகர் மின்சார ரயில்கள் இன்று காலை 9.50 முதல் மாலை 3.50 வரை ரத்து செய்யப்பட உள்ளன.

அதன்படி, சென்ட்ரலில் இருந்து இன்று காலை 8.5, 9, 9.30, 10.30, 11.35 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்களும், கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 9.55, 11.25, நண்பகல் 12, பிற்பகல் 1, 2.30 மாலை 3.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்ட்ரல் வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேபோல், சென்ட்ரலில் இருந்து காலை 8.35, 10.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் புறநகர் மின்சார ரயில்களும், சூலூர்பேட்டையில் இருந்து காலை 11.45 மற்றும் பிற்பகல் 1.15 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.40, நண்பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்களும், கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் புறநகர் மின்சார ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *