மகளை அழைக்க சென்ற தாய் மீடியனில் ஸ்கூட்டர் மோதி பலி
புதுவண்ணாரப்பேட்டை,புதுவண்ணாரப்பேட்டை, நார்த் டெர்மினல் சாலையை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவரது மனைவி தாமரைச்செல்வி, 40.
இவர், ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தன் மகளை, பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வருவதற்காக, டூ-வீலரில் நேற்று முன்தினம் மாலை சென்றார்.
அப்போது, காசிமேடு, எஸ்.என்., செட்டி சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த போது, நிலைதடுமாறி சாலை தடுப்பு சுவரில், மோட்டார் சைக்கிள் மோதி விபத்தானது.
இதில், தாமரைச்செல்வியின் முகம், தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தீவிர பிரிவில் சிகிச்சை பெற்றவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
ராயபுரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.