மது போதையில் விபரீதம் ‘ பங்க்’ ஊழியர் உட்பட 2 பேர் பலி

கே.கே.நகர், பெரம்பலுாரைச் சேர்ந்தவர் வேல்முருகன், 41. இவர், கே.கே., நகர் 100 அடி சாலையில் உள்ள பெட்ரோல் ‘பங்க்’கில் இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்தார். நேற்று அதிகாலை பணி முடிந்து, முதல் தளத்தில் உள்ள ஓய்வறையின் பால்கனியின் தடுப்பு சுவர் மீது மது போதையில் அமர்ந்திருந்தார். அப்போது, நிலை தடுமாறி விழுந்து பலத்த காயமடைந்தார். அங்கிருந்தோர் அவரை மீட்டு 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பரிசோதிக்கையில் உயிரிழந்தது தெரியவந்தது. கே.கே., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

அதேபோல்,விழுப்புரத்தைச் சேர்ந்தவர் செந்தில், 45. இவர், வடபழனி முருகன் கோவில் தெருவில் உள்ள உணவகத்தில் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்தார். கடந்த 19ம் தேதி நள்ளிரவு மது போதையில் ேஹாட்டலின் மூன்றாவது மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியின் மீது படுத்து துாங்கினார்.

அப்பேது, தவறி அருகே உள்ள வீட்டின் ‛ஆஸ்பெட்டாஸ்’ ஷீட் மீது விழுந்தார். இதில், பலத்த காயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று அதிகாலை உயிரிழந்தார். வடபழனி போலீசார் விசாரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *