முதல்வர் பிறந்த நாள் கொட்டி வாக்கத்தில் 28ல் பொதுக்கூட்டம்
”தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, கொட்டிவாக்கத்தில் வரும், 28ம் தேதி, தென்சென்னை தி.மு.க., சார்பில், பொதுக்கூட்டம் நடத்தப்படும். அதில், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பர்,” என, அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், ராட்சத பலுானை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று பறக்கவிட்டார்.
பின், அவர் அளித்த பேட்டி:
முதல்வர் பிறந்த நாள், தென்சென்னை தி.மு.க., சார்பில் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. மாநாட்டுக்கு நிகராக, கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் வரும், 28ம் தேதி மாலை பொதுக்கூட்டம் நடைபெறும். கூட்டத்தில், 20க்கும் மேற்பட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பர்.
அத்துடன், முதல்வரின் வயதை குறிக்கும் வகையில், 72 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடி பறக்கவிடப்பட உள்ளது. பல்வேறு கட்சிகளை சேர்ந்த, 3,000 பேர் தி.மு.க.,வில் இணைய உள்ளனர்.
இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.