பழமையான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஆர்வத்துடன் பார்வையிட்ட மாணவர்கள்
பெரும்பாக்கம், தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் டெக்னிஷியன் சங்கமும், பெரும்பாக்கம் ஊராட்சியும் இணைந்து, பழமையான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் இரண்டு நாள் கண்காட்சியை, பெரும்பாக்கம் கம்யூனிட்டி அரங்கில் நேற்று துவங்கியது.
இந்த கண்காட்சியில், 1940ம் ஆண்டுகளில் இருந்து தயாரிக்கபட்டது முதல் தற்போது வரை பயன்பாட்டில் உள்ள, 1,000க்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
ஆரம்ப கால கட்டங்களில் இருந்த, ‘டிவி, கேமரா, டைப்ரைட்டர், புரஜக்டர், ரேடியோ, கம்ப்யூட்டர், மொபைல் போன், கிராமபோன், டேப் ரிக்கார்டர், ரெக்கார் பிளேயர்’ உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
பெரும்பாக்கம் சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த, பல பள்ளிகளின் மாணவ, மாணவியர் இந்த கண்காட்சியை கண்டு ரசித்தனர். அவர்களுக்கு, எலக்ட்ரானிக் தொடர்பான வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, ஒரு நாள் எலக்ட்ரானிக் பயிற்சி இலவசமாக வழங்கப்படும் என, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
கண்காட்சி இன்றுடன்நிறைவு பெறுகிறது. இன்று காலை 10:00 மணி முதல் பொதுமக்கள், பள்ளி மாணவ – மாணவியர் பார்வையிடலாம்.