கல்லுாரி மாணவியரை தாக்கியவர் கைது
கோடம்பாக்கத்தைச் சேர்ந்த மாணவியர் இருவர், பகுதி நேரமாக மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றனர். இருவரும் நேற்று முன்தினம் இரவு, கோடம்பாக்கம் வெள்ளாளர் தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, மதுபோதையில் வந்த நபர் வீண் தகராறு செய்து, இரு மாணவியரை அடித்து கீழே தள்ளி உள்ளார். இது குறித்து, பாதிக்கப்பட்ட மாணவியர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசாரின் விசாரணையில், வடபழனி கங்கை அம்மன் கோவில் 1வது தெருவைச் சேர்ந்த அர்காதாஸ், 49, என்பவர், மாணவியரை தாக்கியது தெரிய வந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.