பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரூ.78,000 பறிமுதல்

சென்னை, திருவல்லிக்கேணி சார் – பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, கணக்கில் வராத, 78,000 ரூபாயை கைப்பற்றினர்.

சென்னை ராயப்பேட்டை, பாரதி சாலையில், திருவல்லிக்கேணி சார் – பதிவாளர் அலுவலகம் செயல்படுகிறது. அங்கு, பத்திரப்பதிவு செய்ய லஞ்சம் வாங்கப்படுவதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக, இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான போலீசார் நேற்று, திடீர் சோதனை நடத்தி, கணக்கில் வராத, 78,000 ரூபாயை கைப்பற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *