பதுக்கி வைத்து மது விற்பனை மூதாட்டி உட்பட இருவர் கைது
வியாசர்பாடி, :வியாசர்பாடி, சுந்தரம் – 1வது தெரு, ரயில்வே தண்டவாளம் ஓரம், கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக, வியாசர்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி, நேற்று காலை, போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தது.
மது பானம் விற்ற அசோக், 47, என்பவரை கைது செய்த போலீசார், 11 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பின், கொடுங்கையூர் – மேட்டுத் தெருவிலும் மதுபானம் விற்பனை நடப்பதாக வந்த தகவலின்படி, அங்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது, மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த மகாலட்சுமி, 63, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, 10 குவார்ட்டர் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணைக்குப் பின், இருவர் மீதும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.